பிரேமானந்தா அப்பீல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
சென்னை:
பிரபல செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
திருச்சி அருகே உள்ள பாத்திமா நகரில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இங்கு பெண்கள்மட்டுமே அதிக அளவில் இருந்தனர்.
அவர்களில் 13 பேரை பிரேமானந்தா வற்புறுத்தி மானபங்கப்படுத்தி விட்டதாகவும், ரவி என்பவரை கொலைசெய்து ஆசிரமத்திற்குள்ளேயே புதைத்து விட்டதாகவும் பரபரப்பான புகார் எழுந்தது. தமிழகத்தையே உலுக்கியதுபிரேமானந்தா விவகாரம்.
இந்த வழக்கை புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பானுமதி விசாரித்து வந்தார். வழக்குவிசாரணையின் முடிவில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.66 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரேமானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் ஜாமீன் மனு ஒன்றையும் பிரேமானந்தா தாக்கல்செய்தார். ஆனால் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி சண்முகம் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் இந்த மனு மீது விசாரணை நடத்துகிறார்கள்.
பிரேமானந்தா உள்பட 6 பேர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications