கோவில் தாக்குதல்: தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்களே
ஸ்ரீ நகர்:
குஜராத் கோவில் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணையில்தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி காஷ்மீரில் நிருபர்களிடம் பேசுகையில்,
அந்தத் தீவிரவாதிகள் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்தவர்கள். இவர்கள்லஷ்கர்-ஏ-தொய்பா அல்லது ஜெயஷ்-ஏ-முகம்மத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். எல்லோரையும் குழப்பவேதெஹ்ரீக்-ஏ-கசாஸ் என்ற பெயரை எழுதி பாக்கெட்டில் வைத்துள்ளனர்.
நியூயார்க் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தீவிரவாத அமைப்புகள் வெவ்வேறு போலி பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.குஜராத் கோவிலைத் தாக்கிய தீவிரவாதிகளை அனுப்பியது பாகிஸ்தானி ஐ.எஸ்.ஐ. தான் என்பது எங்கள் விசாரணையில் தெரியவருகிறது. தீவிரவாதிகளின் ரேடியோ செய்திகளை இடைமறித்ததில் இந்த விவரம் உறுதியானது.
தீவிரவாதத்தைத் தடுக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். தேவைப்பட்டால் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும்போர் தொடுக்கவும் கூட தயங்க மாட்டோம்.
தீவிரவாதத்தை ஒழிக்க போர் தான் ஒரே வழி என்ற நிலையை பாகிஸ்தான் உருவாக்குமானால், அதற்கு இந்தியா தயார் என்றார்சாமி.
அமெரிக்க முயற்சி உதவவில்லை: வாஜ்பாய்
பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளைத் தடுப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது. தொடர்ந்து பாகிஸ்தானையும்நெருக்கி வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நமது நாட்டைப் பாதுகாக்க அடுத்தவர்களின் உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கமாட்டோம். அமெரிக்கா சில உறுதிமொழிகளைத் தந்தது. இதனால் பாகிஸ்தானை தாக்காமல் விட்டோம். ஆனால், அமெரிக்கமுயற்சிகள் உதவாத நிலையில் இனியும் உலக நாடுகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
நாட்டைப் பாதுகாக்கும் வல்லமையும் பலமும் நமக்கு உண்டு என்றார் வாஜ்பாய்.
ஆதரவு வாபஸ்: தாக்கரே மிரட்டல்
இதற்கிடையே பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வாஜ்பாய் அரசுக்குத்தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
பாக் மாஜி அமைச்சர் கோரிக்கை:
இந் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்களை அரசு உடனே மூடவேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பந்தாரா அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாத முகாம்களை மூடாதவரை இந்தியாவுடன் நல்லுறவுக்கும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயர்விலகவும் வாய்ப்பே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications