டான்சி நிலத்தை ஒப்படைக்க தயார்: கோர்ட்டில் சசிகலா மனு
சென்னை:
டான்சி நிலத்தை மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்கத் தயார் என்று அந்நிலத்தை வாங்கியவரும முதல்வர்ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதாவும் சசிகலாவும்பின்னர் உயர் நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம்சுவாமி ஆகியோர் அப்பீல் செய்த மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வேணுகோபால், டான்சி நிலத்தை அவர் திரும்பவும்அரசிடமே ஒப்படைப்பதற்குத் தயாராக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துஇவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவைத் தவிர சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1993ம்ஆண்டே பாரதி மற்றொரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். டான்சி எல்லைக்கு உட்பட்ட நிலத்தை விற்றது சட்டவிரோதமானது என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் சசிகலா ஒருமனுவைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பகிரங்க ஏலம் மூலமாகத் தான் டான்சி நிலம் விற்பனைக்கு வந்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸின் நிர்வாக பங்குதாரர்என்ற முறையில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தானும் அந்த நிலத்தை வாங்கினேன். இதில் சட்ட மீறல்கள்எதுவும் இல்லை.
டான்சி நிலம் விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
அதே நேரத்தில் இந்த வழக்கின் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, வாங்கிய இரண்டுசொத்துக்களையும் நாங்கள் செலுத்திய பணத்தைக் கூட எதிர்பார்க்காமல் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்கத்தயாராக இருக்கிறேன்.
இந்நிலத்துடன் வாங்கிய மற்ற சொத்துக்களையும் ஒப்படைக்க தயாராக உள்ளேன்.
இது தொடர்பான வழக்குகளில் எந்த வகையான தீர்ப்பு வந்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் ஒப்படைக்கதயாராக உள்ளேன்.
எனவே டான்சி நிர்வாகத்தினர் நாங்கள் ஒப்படைக்கும் சொத்துக்களையும் நிலத்தையும் திரும்பவும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் சசிகலா கூறியுள்ளார்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications