ஒரு ஷாக் நியூஸ்: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது
சென்னை:
தமிழகத்தில் மின் கட்டணம் உயரப் போகிறது.
மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்து மாநில மின் கட்டண ஒழுங்குமுறை ஆணையத்திடம் மாநில மின்வாரியம் ஆலோசனை கேட்டுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் இந்த ஆணையத்திடம் தான் உள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய மின்துறைஅமைச்சராக இருந்தபோது அனைத்து மாநிலங்களிலும் இந்த வாரியத்தை அமைக்கச் செய்தார்.
மின் உற்பத்தி செலவுக்கு ஏற்க கட்டணத்தையும் உயர்த்த இந்த ஆணையத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இந்த ஆணையம்சொல்லும் பரிந்துரைகளை மின் வாரியமும் மாநில அரசும் ஏற்று கட்டணத்தை உயர்த்தும்.
இந் நிலையில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நேரடியாக தானாகவே கட்டணத்தைஉயர்த்தாமல் இந்த ஆணையத்திடம் எவ்வளவு உயர்த்தலாம் என்று மாநில அரசு ஆலோசனை கேட்டுள்ளது.
இந்த ஆணையம் தனது பரிந்துரையைத் தந்தவுடன் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்த உள்ளது.
பயப்பட வேண்டாம்: ஜெ
இதற்கிடையே மின் கட்டண உயர்வு குறித்து இப்போது தான் ஆணையத்திடம் ஆலோசனையே கேட்டுள்ளோம். இதனால்இப்போதே கட்டணம் உயரப் போவது மாதிரி அச்சப்பட வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சி காலத்தில் தான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இதற்குத் தான்உண்டு. இதனால் ஆணையத்திடம் மின் வாரியம் கட்டண உயர்வு குறித்து ஆலோசனை கேட்டு கடிதம் கொடுத்துள்ளது.
ஆணையம் உரிய முறையில் ஆய்வு செய்து புதிய கட்டண விகிதம் குறித்து பரிந்துரை செய்யும். மக்களை அதிகம் பாதிக்காதவகையில் ஆணையம் தனது கட்டண விகிதத்தை முடிவு செய்யும் என்று நம்புவோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த அறிக்கை மூலம் மின் கட்டணம் உயரப் போவது நிச்சயமாகிவிட்டது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications