வழிப்பறி கொள்ளை அடிக்கிறது ஜெ. அரசு: காங். தாக்கு
சென்னை:
மின்சாரக் கட்டணத்தை விரைவில் உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக மக்களிடம்வழிப்பறி கொள்ளை அடிக்கிறது என்று மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன்ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
முந்தைய அதிமுக ஆட்சியின் போது ரேஷன் அரிசியின் விலை கிலோவுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.ஆனால் இந்த விலை உயர்வுக்கு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தான் காரணம் என்று அவர் மீது பழிபோட்டார் ஜெயலலிதா.
பின்னர் அனைவரும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 25 காசுகள் வரை அரிசி விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.மேலும் விவசாயிகள் மற்றும் குடிசைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதனால் மக்கள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும் மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து பலஅத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழக காங்கிரஸ் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications