இன்று "காந்தி ஜெயந்தி": நாடு முழுவதும் மக்கள் அஞ்சலி
டெல்லி:
தேச பிதா மகாத்மா காந்தியின் 133வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.டெல்லியில் உள்ள அவருடைய சமாதியில் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகிய தலைவர்களும் யமுனைநதிக்கரையில் உள்ள காந்தியின் ராஜ்காட் சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும் நிர்மலா தேஷ்பாண்டே தலைமையிலான ஏராளமான காந்தியவாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும்,மாணவ-மாணவிகளும் கூட இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளைக் கண்டதும்உற்சாகமடைந்த டாக்டர் கலாம், அவர்களுக்கு அன்புடன் "நமஸ்தே" கூறினார்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கு சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பஜனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடியும் வரை சோனியா காந்தி அங்கேயேஅமர்ந்திருந்தார்.
புகழ்பெற்ற பாடகரான மதுப் முத்கலின் குரலில் காந்திஜிக்கு மிகவும் பிடித்த "வைஷ்ணவ ஜன்", "ராம் துன்"உள்ளிட்ட பல பாடல்கள் இசைக்கப்பட்டன.
காந்தி சமாதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான காந்தியவாதிகள் ராட்டையுடன் அமர்ந்து நூல் நூற்றனர்.
சமாதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சமாதிக்குள் வந்த அனைவரையும் ராணுவத்தினர்கடுமையாகச் சோதித்த பின்பே உள்ளே அனுமதித்தனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் இதைப் போலவே காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இன்று காந்தி ஜெயந்தி விழாகோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மொரீஷியஸ் தீவிற்குச் சென்றுள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் அங்குள்ளஇந்திய வம்சாவளியினருடன் காந்தி ஜெயந்தி விழாவைக் கொண்டாடினார். அங்கு மகாத்மா காந்தியின் பெயரில்ஒரு கல்வி நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications