கோவை, திருப்பூரில் அமைதி திரும்பியது
கோவை:
குஜராத் கோவில் மீது நடந்த தாக்குதலையடுத்து கோயம்புத்தூரில் பரவியுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர்தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.அனைவருமே அமைதியைப் பேணிக் காக்க உதவுவதாக மாவட்ட கலெக்டர் முருகானந்திடம் உறுதிமொழி தந்தனர்.
கோவை நகர மேயர் மலவரனும் இதில் கலந்து கொண்டு கலெக்டரின் முயற்சிகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனஉறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தையடுத்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் முருகானந்தம் சந்தித்துப் பேசினார். தவறுசெய்பவர்களை உடனே போலீசாரிடம் ஒப்படைப்பதாக அவர்களும் உறுதிமொழி தந்தனர்.
மேலும் கோவையில் பல பகுதிகளிலும் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மத அமைதிக் கமிட்டிகளும் நகரில் அமைதியைஏற்படுத்த முழு உதவி புரிந்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களாக அங்கும் திருப்பூரிலும் எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications