மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியருக்கு அடி-உதை

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

தன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியரை உள்ளூர்பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

வேலூர் மாவட்டம் பசுமாத்தூரில் உள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர்சேகர் (57).

தன் பள்ளியில் படித்து வரும் 4வது மற்றும் 5வது வகுப்பு மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்றுபாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். அடிக்கடி அவர் இந்த லீலைகளைச் செய்து வந்துள்ளதாக உள்ளூர்மக்களுக்குத் தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் பள்ளிக்கு அந்த தலைமை ஆசிரியர் வந்திருந்தார்.

இதை அறிந்து கொண்ட பசுமாத்தூர் மக்கள் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டு சராமாரியாகத் தர்ம அடிகொடுத்தனர்.

அந்தப் பக்கம், இந்தப் பக்கம் அவர் தப்பி ஓட முடியாதபடி தலைமை ஆசிரியரை அந்த மக்கள் அடித்து வெளுத்துவிட்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அறையில் அவரைத் தள்ளி பூட்டி விட்டனர்.

இதற்கிடையே விஷயத்தைக் கேள்விப்பட்ட கே.வி. குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பூட்டி வைக்கப்பட்டிருந்த சேகரை போலீசார் மீட்டனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் அளித்தபுகாரின் அடிப்படையில் அவரைப் போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+