"ஆத்தா காப்பாத்துவா": மதுரையில் 4 பேர் பரிதாப தற்கொலை
மதுரை:
அம்மன் தங்களைக் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தும்,தூக்கில் தொங்கியும் மதுரையில் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை பழைய மீனாட்சி மில் காலனியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்குஒரு ஆண்டுக்கு முன்தான் கல்யாணம் நடந்தது.
இவர்களுடன் ஹேமாவின் அண்ணன்களான இளங்கோவன், கலையரசன் ஆகியோரும் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு பத்திரகாளியம்மன் மீது அபார நம்பிக்கை இருந்தது. எப்போது பார்த்தாலும் பத்திரகாளியம்மனுக்குபூஜை செய்தவண்ணம் இருப்பார்கள். நம்மை அம்மா பார்த்துக் கொள்வாள், நமக்கு சாவே கிடையாது என்றுஅடிக்கடி கூறிக் கொள்வார்களாம்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய பத்திரகாளியம்மனுக்கு பூஜைசெய்துள்ளனர்.
புதன்கிழமை காலை வீரமணிகண்டனின் தந்தை ராஜு அவர்களுக்குப் போன் செய்துள்ளார். ஆனால் பதில் வராமல்போகவே அவர் நேராக வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக் கிடந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ஹேமாவும், அவரது ஒரு சகோதரரும் தூக்கில்தொங்கியபடியும், வீரமணிகண்டனும், இன்னொருசகோதரரும் தரையில் விழுந்தபடி கிடந்ததையும் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஆண்டாள்புரம் போலீஸாருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர்.
இரண்டு பேர் தூக்கில் தொங்கியும், இரண்டு பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். அவர்களுக்குப் பக்கத்தில்பத்திரகாளியம்மன் படம், கேசரி, பாயசம் இருந்தன. பூஜை செய்ததற்கான அறிகுறிகளும் காணப்பட்டன.
இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே இந்த நான்கு பேரும் தற்கொலைக்கு முயன்றனர். தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு,சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து, எங்களை அம்மா காப்பாற்றி விட்டாள் பாருங்கள்என்று பக்கத்து வீடுகளில் கூறியுள்ளனர். அவர்களது அபார பக்தியே இப்போது அவர்களுடைய உயிரைப் பறித்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications