கர்நாடகத்தை எதிர்த்து பெங்களூர் தமிழ் நடிகை குரல்
சென்னை:
கர்நாடகத்தின் போக்கு தவறானது. எனவே தமிழ்த் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த விஜயலட்சுமி பிறப்பால் ஒரு தமிழச்சி ஆவார். கர்நாடகத்திலேயே செட்டிலாகிவிட்டபோதிலும் இவரது வீட்டில் இன்னும் தமிழ் தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
"பிரண்ட்ஸ்" படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான விஜயலட்சுமி, கன்னடத் திரையுலகில்பிரபல நடிகையாவார். ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார், ராஜ்குமாரின் மருமகன் ராம்குமார் உள்ளிட்டவர்களுடன்இணைந்து நடித்துள்ளார்.
கன்னடத்தில் சிறந்த நடிகை விருது பெற்றவர். சென்னை கலாஷேத்ராவில் ருக்மணி தேவி அருண்டேலிடம் பரதம்கற்றவர்.
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகினரின் போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெவித்துள்ளார்விஜயலட்சுமி.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் போக்கு தவறானது, அவர்களது பிடிவாதம் தேவையற்றது என்று கூறும்விஜயலட்சுமி நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என்றார்.
பெங்களூரில் குடும்பம் இருந்தாலும், கன்னடர்களால் பிரச்சினை வரும் என்ற நிலையிலும், தமிழகத்தின் பக்கம்உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு குரல் கொடுத்துள்ள விஜயலட்சுமியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஒரு நடிகைக்கு உள்ள இந்த தைரியம், தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்களுக்கு இல்லையேஎன்பது தான் நெருடலாக உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications