For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது: கர்நாடக அமைச்சரவை மீண்டும் திட்டவட்டம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு தினமும் 9,000 கன அடி நீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்புவந்த சில மணி நேரத்தில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர், தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்றார்.

நேற்றிரவு பெங்களூர் திரும்பிய அவர் இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அதில், தமிழகத்து எக்காரணம் கொண்டும்தண்ணீர் விடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக காவிரி ஆணையத்தைக் கூட்டி தமிழகத்துத் தண்ணீர் தர வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை பிரதமர் வாஜ்பாய் மாற்றவேண்டும் என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

24ம் தேதி வரை தினமும் 9,000 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்தத் தீர்ப் பிரதமர் தலைமையிலானகாவிரி ஆணையம் மாற்றலாம் என்று அதிகாரம் தந்திருந்தது.

அதையே சாக்காக வைத்து இப்போது ஆணையக் கூட்டத்தைக் கூட்டச் சொல்கிறது கர்நாடக அரசு.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நிருபர்களிடம் தெரிவித்த முதல்வர் கிருஷ்ணா, தமிழகத்துக்கு தண்ணீர் தரப்படமாட்டாது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். அன்றாடப் பணிகள் பாதிக்கப்படும் வகையில் செயல்படக் கூடாது என்றார்.

அமைச்சர் காகோடு திம்மப்பா கூறுகையில், நீதிமன்ற உத்தரவை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பின்னர் விவாதிக்கப்படும்என்றார்.

நாம் ஏற்கனவே குறிப்பிடத்தது போல ஆட்சியே போனாலும் பரவாயில்லை, கர்நாடகத்துக்காக போராடிய தியாகி என்ற பெயரோடுமீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற அகம்பாவத்தில் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்:

இந் நிலையில் கர்நாடகத்தில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடக்கவுள்ளது. இதிலும் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாதுஎன்று தீர்மானிக்கப்படும்.

இது தவிர காவிரி ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்படஉள்ளது.

இதற்கிடையே தீவிர தமிழ் எதிர்ப்பு அமைப்புகளான கன்னட ஹிதரக்ஷன சமிதி, கன்னட சாளுவளி ஆகியவற்றின் தலைமையில்அனைத்துக் கட்சிக் கூட்டம் தனியே நடந்தது. இதிலும் தமிழகத்துக்குத் தண்ணீர் விடக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக் கூட்டத்துக்கு கர்நாடக விவசாயிகளுக்கு தலைமை ஏற்று போராட்டம் நடத்தி வரும் மாடே கெளடா தலைமை வகித்தார். இதில்காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சி பிரதிநிதிளும் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசை கலைக்க கோரிக்கை:

உச்ச நீதிமன்றத்தை அவமதித்து தமிழகத்தை தொடர்ந்து ஏமாற்றி வரும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என சமூக நீதிக் கட்சியின்தலைவர் ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல தனக்கு வாழ்க்கைக் கொடுத்த தமிழகத்தைக் கெடுக்க முயலும் ரஜினியை அனைவரும் கண்டிக்க வேண்டும். அவருக்குகண்டனம் தெரிவிக்கும் வகையில், ரஜினி நடித்த படங்களைத் திரையிட வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும், தியேட்டர்உரிமையாளர்களும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தலைவர் நல்லகண்ணுவும் கர்நாடகத்துக்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. கர்நாடகம் தனி நாடு அல்ல என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X