சென்னையில் பிரபல தொழிலதிபர் படுகொலை
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ ரோட்டில் சோப்புக் கம்பெனி அதிபர் படுகொலை செய்யப்பட்டார்.
ஊர்வசி சோப்புக் கம்பெனி அதிபர் துரைசாமி நாடார். இவரது வீடு நுங்கம்பாக்கம் லேக் வியூரோட்டில் உள்ளது.நேற்று வீடு திரும்பிய இவரது மகன் விக்டர், தனது தந்தை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்துஅதிர்ந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
வீட்டைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் வந்துள்ளதாகத் தெரிகிறது. வீட்டில் இருந்த ஒரு பீரோவை உடைக்கஅவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. அந்தக் கும்பலை எதிர்க்கும் போது துரைசாமி நாடாரைஅவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.துரைசாமி நாடாரின் குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில்தான் வசிக்கின்றனர்.
வீட்டினர் அனைவரும் மேல்தளத்தில் இருந்தபோது கீழ் தளத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications