கர்நாடகத்தில் தமிழக லாரி எரிப்பு, தண்டவாளம் சிதைப்பு

Subscribe to Oneindia Tamil

மாண்டியா:

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து மாண்டியா அருகே தமிழக லாரியைசமூக விரோதக் கும்பல் தீ வைத்து எரித்தது.

நேற்று இரவு இச் சம்பவம் நடந்தது. வட மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த தமிழகப் பதிவு எண் கொண்டலாரியை வழி மறித்த கும்பல் டிரைவரையும் கிளீனரையும் கீழே இறக்கிவிட்டுத் தாக்கியது.

பின்னர் அந்த லாரியின் டீசன் டேங்கை உடைந்து டீசலை எடுத்து லாரியின் மீது தெளித்தனர். அவர்களிடம் லாரியை விட்டுவிடுமாறுகெஞ்சிய டிரைவருக்கும் கிளீனருக்கும் அடி விழுநத்து.

டீசலை ஊற்றிய பின்னர் அந்த லாரிக்கு தீ வைத்துவிட்டு அந்தக் கும்பல் தமிழகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியது.

ரயிலுக்கு தீ வைப்பு:

அதே போல மைசூரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த நிஜாமுதீன் ஸ்வர்ண ஜெயந்தி எக்பிரஸ் ரயில் மாண்டியாவில் உள்ள மத்தூர்ரயில் நிலையத்தை அடைந்தபோது அங்கு கூடியிருந்த விவசாயிகளும் நூற்றுக்கணக்கான சமூக விரோதிகளும் சேர்ந்து ரயிலின்என்ஜினுக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து அந்த ரயிலும் மேலும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை- மைசூர் இடையிலான ரயில் அரிசிகெரே வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

தண்டவாளம் சிதைப்பு:

இன்று மைசூர்-பெங்களூர் இடையிலான பிராட் கேஜ் ரயில் தண்டவாளத்தை பாண்டவபுரா அருகே கன்னட வெறிக் கும்பல் சிதைத்த.ஸ்லீப்பர் கட்டைகளை அகற்றிய தண்டவாளத்தை உடைத்தனர். எரியும் டயர்களை போட்டு சாலைகளிலும் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் மைசூர்- பெங்களூர் இடையிலான பஸ், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுவிட்டது. பல வாகனங்களை கல் வீசியத்தாக்கிய கும்பல் சில வாகனங்களின் காற்றைப் பிடுங்கிவிட்டு மக்களை நடு ரோட்டில் இறக்கி விட்டுள்ளனர். சாலைகளில் கற்களைப்போட்டு தடைகளை ஏற்படுத்தி வைத்துள்ளனர். கல்வீச்சில் 40 பஸ்கள் சேதமடைந்துள்ளன.

மாண்டியாவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

காவிரியில் இறங்கி போராட்டம்:

இந் நிலையில் கிருஷ்ணராஜ சாகர், கபினி நீர்த் தேக்கங்களில் இருந்து தமிழகத்துக்கு நீர் சென்றுவிடாமல் தடுக்க 24 மணி நேரமும் ஷிப்ட்முறையில் விவசாயிகள் அணையைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இன்று காலை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் காவிரி அணையில் நீரில் இறங்கி நின்று தமிழகத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம்நடத்தினர்.

மைசூரில் பல்வேறு கட்சியினர் மெளன ஊர்வலம் நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+