காவிரி: நாளை முதல் 9 நாள் பாதயாத்திரை செல்கிறார் கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு எடுத்துள்ள முடிவுகளைப் பற்றிஅம்மாநில மக்களிடம் விளக்குவதற்காக பெங்களூரிலிருந்து கபினி அணையை நோக்கி அம்மாநில முதல்வர்கிருஷ்ணா நாளை முதல் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
காவிரி அணையிலிருந்து நீர் திறந்துவிட வேண்டிய அவசியமே இல்லை. நீர் திறந்து விடவும் மாட்டோம் என்றுகூறிய கிருஷ்ணா, எனவே பொதுமக்கள் ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதற்காகத் தான் இந்தப் பாதயாத்திரையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக விவசாயிகளின் உரிமையைக் காப்பதற்காக எந்தவிதமான தியாகத்திற்கும் அரசு தயாராக உள்ளதுஎன்பதை மக்களிடம் கூறிப் பிரச்சாரம் செய்யப் போவதாகக் கூறிய கிருஷ்ணா நாளை காலை 7.15 மணிக்குபெங்களூர்-மைசூர் ரோட்டிலுள்ள ராஜராஜேஷ்வரி கோவில் வளைவிலிருந்து தன் பாதயாத்திரையைத்துவக்குகிறார்.
பிடுதி, ராம்நகர், சென்னப்பட்டணா, மத்தூர், மாண்டியா, கங்கோடு, கிருஷ்ணராஜ சாகர் அணை, மைசூர்வழியாகச் செல்லும் கிருஷ்ணா வரும் 15ம் தேதி கபினி அணையைச் சென்றடைவார். அவருடன் நீர்ப்பாசனத்துறைஅமைச்சர் பாட்டீலும் செல்லவுள்ளார்.
இதற்கிடையே கிருஷ்ணாவின் இந்தப் பாதயாத்திரைக்கு அம்மாநில எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"பாபா" தியேட்டர் மீது தாக்குதல்:
இதற்கிடையே பெங்களூரில் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தின் "பாபா" திரையிடப்பட்ட தியேட்டர் மீது தாக்குதல்நடத்தப்பட்டது.
சேஷாத்திரிபுரத்தில் உள்ள அந்தத் தியேட்டருக்கு நேற்று பிற்பகல் வந்த ஒரு கும்பல் அதன் கதவு மற்றும் ஜன்னல்கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. கற்களை வீசியும் தாக்கியது.
தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த "பாபா" பட பேனர்களையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கிழித்து எறிந்தனர்.போலீசார் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலின் போது அங்கு "பாபா" படம் ஓடிக் கொண்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications