காவிரி: ஜெ. தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
காவிரி பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் கர்நாடக அரசுமீறியுள்ளதைத் தொடர்ந்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகதமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயசங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
கர்நாடக அரசுக்கு எதிரான முக்கியத் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்ததிமுக இன்றை கூட்டத்திலாவது கலந்து கொள்ளுமா என்பது பற்றித் தெரியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை விட்டஜெயலலிதா, அம்மாநில அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரும் என்றும்கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications