மதமாற்றத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு நடவடிக்கை
சென்னை:
மதமாற்றத்தில் ஈடுபடுபதைத் தடை செய்துள்ள தமிழக அரசு, அவ்வாறு கட்டாய மதமாற்றத்தில்ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்என்றும் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய தடைச் சட்டத்தில் ஆளுநர் ராமமோகன் ராவ் நேற்றுகையெழுத்திட்டார்.
தமிழகத்தில் உள்ள பல சிறைகளிலும் கூட கைதிகளுக்கிடையே மதமாற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் மதமாற்றத்தைத் தடை செய்யும் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. மதமாற்றத்தில்ஈடுபடுபவர்கள் மீது இந்தச் சட்டம் பாயும். மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
பா.ஜ.க. வரவேற்பு:
இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை இந்தியாவின் மாபெரும் இந்துக் கட்சியான பாரதீய ஜனதா கட்சிவரவேற்றுள்ளது.
தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளரான இல. கணேசன் இதுகுறித்துக் கூறுகையில்,
சில மதத்தினர் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் ஏராளமான பணத்தைக் கொண்டு அப்பாவி ஏழை இந்துக்களைமதமாற்றம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு மதமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து சட்டம் கொண்டு வந்துள்ள தமிழக முதல்வரை நான்பாராட்டுகிறேன்.
இந்தச் சட்டத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்கணேசன்.
சங்கராச்சாரியார் ஆதரவு:
இதற்கிடையே காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் சில மதங்கள் மக்களை மதமாற்றம்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கொடுமையை நீக்குவதற்காக வந்துள்ள இந்தச் சட்டம்வரவேற்புக்குரியது.
தமிழகத்தைப் போலவே இந்தியா முழுவதிலும் பொதுவாக இதுபோன்ற மதமாற்றத் தடைச் சட்டம் அமல்செய்யப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளும் பொதுமக்களும் இந்தச் சட்டத்திற்குத் தங்களுடைய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஸ்ரீஜெயேந்திரர்.
இதே போல் "தனித் தமிழ் சேனா" என்ற அமைப்பு உள்ளிட்ட வேறு பல அமைப்புகளும் இந்தச் சட்டத்தைவரவேற்றுள்ளன.
தேசிய லீக் எதிர்ப்பு:
இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை இந்திய தேசிய லீக்கின் தலைவர் அப்துல் காதர் கூறியுள்ளார். இன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் சட்டம் தனியொரு மனிதனின் உரிமையைப் பறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மற்றொரு மதத்தின் மீது பற்றுக் கொண்டு அதில் சேர விரும் ஒருவரை எப்படித் தடுக்க முடியும்? எனவே இப்படிஒரு சட்டம் தேவையே இல்லாதது.
ஆனாலும் கட்டாய மதமாற்றத்தை இஸ்லாமிய மதம் வற்புறுத்தவில்லை என்பதால், இந்தச் சட்டத்தால் எங்களுக்குஎந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று அப்துல் காதர் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல் படுத்தியுள்ள முதல் மாநிலம் தமிழகம் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications