கர்நாடகத்தை கண்டித்து "பந்த்" நடத்த வேண்டும்: கருணாநிதி
சென்னை:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் பந்த் நடத்த இன்றுநடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில்,
இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள்புறக்கணிக்கும் போதிலும், இந்தக் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும்வகையில் ஏதாவது உருப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டால் அதற்கு நாங்கள் எங்கள் ஆதரவைத்தெரிவிப்போம்.
கர்நாடக அரசைக் கண்டித்து மாநில அளவில் பந்த் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை நாங்கள்கட்டாயம் வரவேற்போம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படாவிட்டால் நாங்கள் மற்ற எதிர்க் கட்சிகளுடன் பேசி பந்த்நடத்துவோம்.
இதையெல்லாம் விட்டுவிட்டு கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோருவதெல்லாம்மிகவும் தவறான அணுகுமுறையாகும்.
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறதுஎன்றாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட மறுப்பது கடும்கண்டனத்துக்குரியது என்றார் கருணாநிதி.
திரையுலகினர் வரும் 12ம் தேதி நெய்வேலியில் நடக்கவுள்ள பேரணிப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளப் போவதில்லையாமே என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த கருணாநிதி,
"இன்று காலை தான் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் சரத்குமார் என்னிடம் பேசினார். அதில் ரஜினிகாந்த்போராட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் நெய்வேலிக்கு பதிலாக போராட்டத்தை சென்னையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியதாக சரத் தெரிவித்தார்.
மேலும் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை திமுக ஆதரிக்கிறது. இந்தப் போராட்டத்தில் திமுக கலைஞர்கள்கலந்து கொள்வார்கள்.
சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர் உள்ளிட்டோர் நெய்வேலிக்குப் போகலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையில் தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள சட்டத்தை ஏற்க முடியாது.பெரியாரின் கொள்கைப்படி, அண்ணாவின் கொள்கைப்படி இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட உள்ளது என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications