தமிழக மதமாற்ற தடைச் சட்டம்: ஆதரவும் எதிர்ப்பும்
டெல்லி:
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லீம்அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
வற்புறுத்தி யாரையும் மதமாற்றம் செய்வது சுத்த காட்டுமிராண்டித்தனம். அப்படி யாரையும் கட்டாய மதமாற்றம்செய்துவிட முடியாது.
ஆனால் மதமாற்றம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அவனுடைய நம்பிக்கைகளுக்கேற்பஅவன் மதம் மாறிக் கொள்வதில் தவறேதும் இல்லை.
இந்திய அரசியல் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டம் ஆகியவற்றில் கூட இதுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மதமாற்றத்தை ஏற்கனவே பல நாடுகள் கட்டாயப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை யாரும் கட்டாய மதமாற்றம்செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு உடனடியாக இந்தச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மதுரைபேராயர் ஆரோக்கியசாமி இன்று கூறினார். அவ்வாறு வாபஸ் பெறாவிட்டால் சிறுபான்மையினர் நடத்தும் கல்விநிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லீம்களும் எதிர்ப்பு:
இதற்கிடையே ஒரு மனிதனின் மதமாற்ற உரிமையில் சட்டம் தலையிடுவது சரியல்ல என்று அகில இந்திய முஸ்லீம்மஜிலிஸ்-ஏ-முஷாவரட் என்ற அமைப்பின் தலைவரான சையது சகாபுதீன் கூறினார்.
வேற்று மதத்தில் ஒருவன் நம்பிக்கை கொள்வது ஒன்றும் கிரிமினல் குற்றம் கிடையாது. அது அவனுடைய உரிமை.எனவே இந்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கே எதிரானதாகும் என்றார் சகாபுதீன்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று தெரிவித்த அவர், நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எத்தனைமதங்களை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது என்றும் ஆனால் தமிழக முதல்வர்ஜெயலலிதாவோ இந்தியா முழுவதும் இந்துக்களுக்கே சொந்தமானது என்று கூறும் வகையில் இந்தச் சட்டத்தைக்கொண்டு வந்துள்ளார் என்றும் சகாபுதீன் கூறினார்.
இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
வி.எச்.பி. வரவேற்பு:
இதற்கிடையே தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை விசுவ ஹிந்து பரிஷத்அமைப்பு வரவேற்றுள்ளது.
இன்று கோயம்புத்தூரில் அதன் தலைவர் அசோக் சிங்கால் நிருபர்களிடம் கூறுகையில்,
மத சுதந்திரம் என்பது வேறு, மதமாற்ற சுதந்திரம் என்பது வேறு. இந்தியாவில் தங்கள் மதத்திற்கென்று தனி நாடுகேட்டுப் போராட எந்த மதத்தினருக்கும் உரிமை கிடையாது.
மத சுதந்திரத்தைப் பயன்படுத்தி மதமாற்றத்திற்கு ஒருவர் முயன்றால், அதை சட்டம் போட்டு தடுப்பதைத் தவிரவேறு வழியில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு மற்றமாநிலங்களும் இதுபோன்ற மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
இந்து மதத்திலேயே நம் நாட்டில் மட்டும் சுமார் 150 பிரிவுகள் உள்ளன. ஆனால் மற்ற மதத்தினரை இந்துமதத்திற்கு மாற வேண்டும் என்று இதுவரை யாரும் கூறியது இல்லை. கட்டாயப்படுத்தவும் இல்லை என்றார்சிங்கால்.
இந்நிலையில் தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை பா.ஜ.க. தலைவரான வெங்கையா நாயுடுவும்வரவேற்றுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications