சென்னையை "வெளுத்து வாங்கும்" மழை
சென்னை:
சென்னையில் தொடர்ந்து 2 நாட்களாகக் கன மழை பெய்து நகரை குளிர்வித்து வருகிறது.
சென்னையில் கோடை காலம் முடிந்தும் கூட வெயில் குறையவில்லை. மாறாக, கோடை காலத்தை விடஅதிகமாகவே வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேல் திடீரென்று மழை பெய்தது. வழக்கமாக பெய்வதைப்போல தூறலோடு நின்று விடாமல் சுமார் 1 மணி நேரம் நல்ல மழை பெய்தது.
அவ்வப்போது பெய்து வந்ததால், மக்கள் நிம்மதியடைந்தனர். அன்று இரவும் நீடித்த மழை நேற்று காலை 6 மணிவரை அவ்வப்போது தொடர்ந்து பெய்ததால் சென்னை நகரில் நிலவி வந்த வெப்பம் குறைந்து குளுமைநிலவுகிறது.
தொடர்ந்து நேற்றும் அடை மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்ததோடு, பந்த்திற்கு கூடுதல் "எபக்ட்"டும்சேர்த்தது. இந்த மழை மேலும் ஓரிரு நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
கன மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள்அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே மோசமாக இருந்த பல சாலைகள் இன்னும் மோசமாக சேதமடைந்துள்ளன.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் தான் இந்த திடீர் மழைக்குக் காரணம் என்று வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரிலும்...
இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தின் தாக்கம் பெங்களூரிலும் எதிரொலித்தது.
நேற்று பகல் ஓரளவு சுமாராகப் பெய்து கொண்டிருந்த மழை இரவு 11 மணிக்கு மேல் வலுவடைந்தது.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications