""பெங்களூரில் மொழிக் கலவரத்தை தூண்ட கன்னட சங்கங்கள் சதி""
பெங்களூர்:
தமிழ்த் தாய் உருவபொம்மை எரித்தல், தமிழ் நாளிதழ்களைக் கொளுத்துதல், தமிழ் சேனல்களை நிறுத்துதல்ஆகியவற்றின் மூலம் மொழிக் கலவரத்தைத் தூண்ட கன்னட சங்கங்கள் சதி செய்வதாக பெங்களூர் தமிழ்ச் சங்கம்குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் தாமோதரன் ஆகியோர்விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்த் தாயின் உருவபொம்மையைக் கொளுத்துவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தத் தீயசெயலை கர்நாடக அரசு தடுக்க வேண்டும்.
தமிழ்த் தாயின் உருவ பொம்மையை எரிப்பது தன் தாயையே தீயிட்டுக் கொளுத்தும் மகா பாவமாகும்.தமிழர்களையும், தமிழையும் இழிவுபடுத்திப் பேசியே அறுவடை செய்யும் அரசியல்வாதிகளைக் கடவுள் தான்தண்டிக்க வேண்டும்.
தமிழ்ப் பத்திரிக்கைகளைக் கட்டுக் கட்டாகக் கொளுத்துவதும், தமிழ் நாளிதழ் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்என்ற மிரட்டுவதும் சிறுபிள்ளைத் தனமாகும். கர்நாடகத்தில் அரசு செயலற்றுப் போய்விட்டது என்பதையே இதுகாட்டுகிறது.
சில கன்னட அமைப்புகளின் வற்புறுத்தலின் பேரில் தான் கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சரியா, தவறா என்று கர்நாடக அரசும் காவல்துறையும் எண்ணவேண்டாமா?
இந்த விஷயத்தில் கூட அரசும் காவல்துறையும் தலையிடவில்லையென்றால் "தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்றநிலை தான் ஏற்படும்.
தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் வீணாகத் தமிழர்களையும்கன்னடர்களையும் பலிகடா ஆக்க வேண்டாம்.
கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு கட்டணம் செலுத்துவது பற்றி மக்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். எனவேஇவ்விஷயத்தில் அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications