காஷ்மீரில் அடுத்த ஆட்சி: காங். செயற்குழு கூடுகிறது
டெல்லி:
காஷ்மீரில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு இன்று இரவு கூடுகிறது.
காஷ்மீரில் தேர்தலில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. 25 ஆண்டுகளாகஆட்சியில் இருந்த அவரது கட்சி நடந்து முடிந்த தேர்தலில் 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
87 பேர் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 28 இடங்களை வென்று தனிப் பெரும்கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி வென்றிருந்தாலும் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மை இல்லை.
இதனால் 21 இடங்களில் வென்றுள்ள காங்கிரசும், 15 இடங்களில் வென்றுள்ள காங்கிரசில் இருந்து பிரிந்த முப்தி முகம்மத் சயீத்மற்றும் அவரது மகள் மெஹ்பூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க உள்ளன. இந்தஇருவரும் சேர்ந்தாலும் 36 இடங்கள் தான் உள்ளன.
பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிட், ஜம்மூ-காஷ்மீர் மக்கள் கட்சி ஆகியவை காங்கிரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன.
இதனால் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. யாரை முதல்வராக்குவது, துணை முதல்வர்பதவியை மெஹ்பூபாவுக்கு வழங்குவது ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ்செயற்குழு இன்று இரவு கூடுகிறது.
காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத்தைத் தான் முதல்வர் பதவிக்கு முன் நிறுத்தி காங்கிரஸ் போட்டியிட்டது.இந்த வெற்றி காங்கிரசே எதிர்பார்த்திராத ஒரு வெற்றியாகும்.
கடந்த தேர்தலில் 8 இடங்களில் வென்ற பா.ஜ.கவுக்கு இப்போது ஒரு இடத்தில் தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு உள்ளூர் கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் இந்தத் தோல்விக்குக் காரணம் என பா.ஜ.க. கூறுகிறது.
-->
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications