திரிகோணமலையில் தாக்குதல்: 3 தமிழர்கள் பலி- ஊரடங்கு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அம்பாரை மாவட்டத்தில் போலீசாரால் 8 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து திரிகோணமலையில்நடந்த நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கிரனைட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 3 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் திரிகோணமலையில் நாளை காலை வரை ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு இயக்கதைச் சேர்ந்த இரண்டு பேரை அதிரடிப்படை போலீசார் பிடித்துச்சென்று வட-கிழக்கு இலங்கையில் உள்ள அம்பாரை அருகே உள்ள கஞ்சன்குடா அதிரடிப்படை முகாமில் சிறைவைத்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள தமிழர்கள் அந்த அதிரடிப்படையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அவர்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு தமிழர்கள்கொல்லப்பட்டனர். இதையடுத்து வட-கிழக்கு இலங்கை முழுவதுமே பெரும் பதற்றம் நிலவுகிறது

இந்நிலையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து திரிகோணமலை பகுதி மக்கள் இன்றுகடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நடத்தப்பட்ட பந்த் காரணமாக இன்று இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது சிலர் கிரனைட் குண்டுகளை வீசித்தாக்கினர். இதில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.அனைவரும் திரிகோணமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து திரிகோணமலையிலும் அம்பாரையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.தமிழர்- சிங்களர் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திரிகோணமலையில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து தற்போது தான் முதன் முறையாகபெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நார்வே குழுவினர் இதில் தலையிட்டு அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவங்களால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எந்தப் பங்கமும் ஏற்படக் கூடாது என்று எல்.டி.டி.ஈ. அரசியல்பிரிவுக்கு அதன் தலைவர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+