இதே பாரதிராஜா தான் முன்பு என்னை புகழ்ந்தார்: கருணாநிதி
சென்னை:
என்னை இப்போது விமர்சிக்கும் இதே பாரதிராஜா தான் நான் முதல்வராக இருந்தபோது என்னைப் புகழ்ந்தார் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
நேற்று ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாரதிராஜா, கருணாநிதியா? அது யார்? அவரை நான் ஏன் சந்திக்க வேண்டும்என்று கேட்டிருந்தார்.
இது குறித்து இன்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,
இப்போது நான் யார் என்று கேட்கிறார். இதே பாரதிராஜா தான் நான் முதல்வராக இருந்தபோது பொது மேடையில் வைத்துவாயாரப் புகழ்ந்தார். பரிசும் கொடுத்தார் என்றார்.
பரமசிவன் கழுத்து பாம்பு: டி.ஆர்.
இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த பாரதிராஜாவை, டி.ராஜேந்தர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இன்று நெய்வேலி செல்ல நடிகர் சங்கம் வரை வந்த டி.ராஜேந்தர் பாதியிலேயே திரும்பிச் சென்றார். பின்னர் அவர் வெளியிட்டஅறிக்கையில்,
கலைஞரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நான் நடிகர் சங்கம் சென்றேன். ஆனால், அங்கு பஸ்கள் புறப்படுவதற்கான அறிகுறியேஇல்லை. காத்திருந்த திமுக நடிகர்களாக எங்களை வேண்டா வெறுப்பாக சிலர் பார்த்தனர்.
அழையா விருந்தாளி நிலைமையில் இருந்த நான், சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர் ஆகியோர் உள்ளம் புழுங்கினோம்.ஆனாலும் பொறுமை காத்து நின்றோம். அப்போது தான் கலைஞரை யார் அவர்? என்று கேட்டு பாரதிராஜா பேசிய செய்தியைபடிக்க நேர்ந்தது.
இதனால் நான் மேற்கொண்டு அவர்களுடன் சேர்ந்து போக விரும்பாமல் அதே நேரத்தில் அங்கே சலசலப்பையும் ஏற்படுத்தாமல்அமைதியாக திரும்பிவிட்டேன்.
கலைஞரைப் பார்த்து யார் இவர் என்று கேட்கும் பாரதிராஜா, அவர் முதல்வராக இருந்தபோது எத்தனை முறை போய் சந்தித்தார்என்பது உலகறியும். அப்போது கலைஞர் யார் என்று இவருக்குத் தெரியவில்லையா?
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா என்ற வரிகள் தான் பாரதிராஜாவைப் பார்த்தால் எனக்குநினைவுக்கு வருகிறது.
இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால், பின்னர் தானாக தனியே நெய்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார் ராஜேந்தர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications