உண்ணாவிரதத்தை முடித்தார் ரஜினி
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் விட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மேற்கொண்டிருந்தஉண்ணாவிரதப் போராட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் மாலை 5 மணியுடன் முடித்துக் கொண்டார்.
ஒரு சிறுமி கொடுத்த பழச்சாற்றை அருந்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை ரஜினி நிறைவு செய்தார். அதன் பின்னர்அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த உண்ணாவிரதத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு உதவிய என்னுடைய ரசிகர்களுக்கும், நடிகர்,நடிகைகளுக்கும், திரையுலகினருக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும், வாழ்த்துக் கூறியஅனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மூத்த தலைவரான திமுக தலைவர் கருணாநிதியும் இந்த உண்ணாவிரத மேடைக்கு வருவதாகஅறிவித்திருந்தார். ஆனால் நான் தான் அவரை வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.
ஆனால் அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் என்னுடைய அன்பானநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் மிகவும் நன்றி.
இந்த உண்ணாவிரதத்தின் வெற்றி கர்நாடக அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதை கர்நாடக அரசுஉடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
எனவே என்ன செய்வார்களோ, ஏது செய்வார்களோ எனக்குத் தெரியாது. உடனடியாக தமிழகத்திற்கு காவிரியில்கர்நாடக அரசு நீரைத் திறந்து விட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் படி கர்நாடக அரசை மத்திய அரசும் வலியுறுத்த வேண்டும்.
இது தொடர்பான ஒரு மனுவை தமிழக ஆளுநரிடம் கொடுப்பதற்காகத் தான் நான் இப்போது ஆளுநர்மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்றார் ரஜினி.
இவ்வாறு நிருபர்களிடம் கூறிய ரஜினி உடனடியாகக் காரில் ஏறி ராஜ் பவனை நோக்கிப் புறப்பட்டார். ஆளுநர்பி.எஸ். ராமமோகன் ராவ் ஊரில் இல்லாததால், அவருடைய செயலாளரிடம் ரஜினி மனுவைக் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications