புறா பறக்க விட்டார் ரஜினி
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு பல்வேறு திரையுலகினர், அரசியல்வாதிகள் தொடர்ந்துவாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் லிவிங்ஸ்டன் புறா ஒன்றைக் கொண்டு வந்து ரஜினியிடம் கொடுத்து அதை பறக்க விடச் சொன்னார். ரஜினி சிரித்துக் கொண்டே அதைப் பறக்க விட்டார்.
அதேபோல திமுகவைச் சேர்ந்த சிலரும் புறாவைக் கொடுக்க அதையும் ரஜினி பறக்க விட்டார். புறா பறக்காமல் இருக்கவே விஜயகாந்த் பறக்கவிட உதவினார்.
பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய புத்தகம் ஒன்றை ரஜினிக்கு வைரமுத்துபரிசாக அளித்தார்.
ரஜினி அரசியலுக்கு போகிறாரோ?- கமல்:
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்த ரஜினிக்கு நடிகர் கமலஹாசனும் வாழ்த்துக் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ரஜினியின் உண்ணாவிரத மேடையைப் பார்க்கும் போது அவர் வேறு ஏதோ ஒரு பாதையை நோக்கிப்போய்க்கொண்டிருப்பது போலத் தெரிகிறது.
அது அரசியலா என்று எனக்குத் தெரியவில்லை. அதில் எனக்குப் பழக்கமும் இல்லை. இருந்தாலும் காவிரிபிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.
நெய்வேலியில் பாரதிராஜா பேசியவை எதுவும் எனக்குப் புதிதாகத் தெரியவில்லை. அவை தப்பு என்றும் நான்சொல்ல மாட்டேன் என்றார் கமல்.
பாபா சாமியிடம் ஆசி:
வாயில் வேல் குத்தி, பாபா முத்திரையைக் காண்பித்தவாறு ஒரு சாமியார் ரஜினியை வந்து வாழ்த்தினார். அவரிடம்பய பக்தியுடன் ரஜினி ஆசி பெற்றுக் கொண்டார்.
அதேபோல, ஒரு குழந்தை அதன் தாயுடன் மேடைக்கு வந்து பாபா முத்திரைகளைக் காண்பித்து ரஜினியைஅசத்தியது.
வாழ்த்து கூறிய திரையுலகினர்:
நடிகர் ரவிச்சந்திரன் தனது மகன் அம்சவிர்தனுடன் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்.
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், லாரன்ஸ் ராகவேந்திரா, சின்னி ஜெயந்த், ரமேஷ் கண்ணா, வினுச்சக்கரவர்த்திஆகியோரும் ரஜினியை வாழ்த்தினர்.
மூத்த நடிகர் ஜெமினி கணேசனும் ரஜினியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தினார்.
விஜயகாந்த் சிறிது நேரம் இருந்து விட்டு பிறகு கிளம்பி விட்டார்.
நடிகர் செந்தில் கூறுகையில், நெய்வேலியில் நடந்ததும், இப்போது நடப்பதும் தண்ணீர் விட வேண்டும் என்றுகோரித் தான். இதில் தப்பு எதுவும் இல்லை என்றார்.
அதேபோல் இயக்குநர்கள் பாக்கியராஜ், பார்த்திபன், கேயார் ஆகியோரும் ரஜினிக்கு நேரில் வாழ்த்துத்தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications