ரஜினியின் செயல்களில் எனக்கு உடன்பாடில்லை: பாரதிராஜா
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் அதில் கலந்துகொள்ளவில்லை, ஆதரிக்கவும் இல்லை என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
இன்று செய்தியாளர்களிடம் பாரதிராஜா கூறுகையில்,
எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டபோது, எனது தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போதுயாரும் என்னை அதிமுககாரன் என்று கூறவில்லை. அதேபோல, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு டாக்டர்பட்டம் வழங்கப்பட்ட போதும் எனது தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போதும் யாரும் என்னைகாங்கிரஸ்காரன் என்று வர்ணிக்கவில்லை.
கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவின்போது எனது ஆயுளின் பாதியை அவருக்கு வழங்குவதாக அறிவித்தேன்.அப்போது கூட யாரும் என்னை திமுககாரன் என்று கூறவில்லை.
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது அவருக்குப் பாராட்டு தெரிவித்தேன். அப்போதும் யாரும் என்னைஅதிமுககாரன் என்று கூறவில்லை.
ஆனால் நெய்வேலிப் போராட்டத்தை நான் நடத்திய போது மட்டும் எனக்கு வர்ணம் பூசுகிறார்கள். கடுமையாகவிமர்சிக்கிறார்கள்.
அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். காவிரிப் பிரச்சினை ஒரு பொதுப் பிரச்சனை, மக்கள்பிரச்சனை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் நான் போராட்டம் நடத்தினேன்.
இதற்காக யார், என்னை எப்படி விமர்சித்தாலும் எனக்குக் கவலையில்லை. எனது பாதையில்தான் நான்பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பேன்.
காவிரிப் பிரச்சினையில் தீர்வு ஏற்படும் வரை திரையுலகினரின் போராட்டம் தொடரும். எங்களதுபோராட்டத்திற்குப் பிறகும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் இதை விட மிகுதியாக நாங்கள் போராடவும் தயாராகஉள்ளோம்.
என்னைப் பற்றி, நான் அறிமுகப்படுத்திய ராதிகாவும், நெப்போலியனும் விமர்சித்திருப்பது குறித்துக் கருத்துக் கூறவிரும்பவில்லை. குழந்தையை தூக்கிக் கொஞ்சும் போது, அது நம் முகத்தில் மூத்திரம் இருந்து விட்டால் அதைத்தூக்கியா எறிந்து விடுகிறோம்? அதுபோலத்தான் என் மீது கூறப்படும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த் நடத்திய உண்ணாவிரதத்தில் எனக்கு உடன்பாடில்லை. நெய்வேலியில் நாங்கள் 12ம் தேதிபோராட்டத்தை அறிவிக்கிறோம். அதே தினத்தில் அவர் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார் என்றால் அது பிளவுஏற்படுத்தும் நடவடிக்கை இல்லையா?
ஒற்றுமையுடன் இருந்துபோராட வேண்டிய நேரத்தில் பிளவை ஏற்படுத்த அவர் முயலலாமா? அதனால் தான்எனக்கு உடன்பாடில்லை. அவர் 13ம் தேதிக்கு மாற்றியிருந்தாலும் அதிலும் எனக்கு உடன்பாடில்லை.
அவர் நெய்வேலிக்கு வந்திருந்தால், முழு மனதுடன் போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் நானும் சந்தோஷத்துடன்அவரது உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருப்பேன்
அவர் எனக்கு நண்பர் தான், இன்னும் நண்பர் தான். இருப்பினும் அவரது போக்கு திரையுலகினர் மத்தியில்பிளவை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் அவரது செயல்களில் எனக்கு உடன்பாடில்லை என்றார் பாரதிராஜா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications