கன்னட நடிகர்களுக்கு தடை விதிக்க திட்டம்?
சென்னை:
பெங்களூரில் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழ் சினிமாவில்நடித்து வரும் கன்னட மொழி நடிகர்களுக்கு தடை விதிப்பது குறித்து கோடம்பாக்கத்தில் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
காவிரிப் பிரச்சினையைக் காரணம் காட்டி கன்னட வெறியர்களின் பயமுறுத்தல் காரணமாக பெங்களூர், மைசூர்உள்ளிட்ட கர்நாடகம் முழுவதிலும் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ் டி.வி.சேனல்களும் ஒளிபரப்பாகவில்லை.
கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்குப் பதிலடி நடவடிக்கையில் இறங்க தமிழ்திரையுலகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, தமிழ் சினிமாவில் நடித்து வரும் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர்களான அர்ஜூன்,பிரபுதேவா, முரளி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தடை விதிப்பது குறித்து தமிழ்திரையுலகின் முக்கியப் புள்ளிகள் ரகசியமாக ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் இதுதொடர்பாக பேசி வருவதாகத்தெரிகிறது. தமிழ்த் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் ரஜினியின் பெயரையும் சேர்க்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவேறு கருத்துக்கள் இருப்பதால் திரையுலகினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும்தெரிகிறது.
கன்னட நடிகர்களை அனுமதிப்பதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும், நெய்வேலி பேரணியில்கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு ரஜினியின் உண்ணாவிரத்தில் காலை முதல் மாலை வரை அமர்ந்தநடிகர்கள் பிரகாஷ் ராஜ், அப்பாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில தயாரிப்பாளர்கள்வற்புறுத்தியுள்ளனராம். அவர்களிடம் நிெய்வேலி போராட்டத்திற்கு வராத காரணத்தைக் கேட்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் இனி கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்ட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களை தமிழ் சினிமாவில்அறிமுகப்படுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் பல குழப்பங்கள் வெடிக்கப் போவது நிச்சயம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications