கெட்ட பெயரை சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம்: ராமதாஸ்
சென்னை:
சமீப காலமாகத் திரையுலகில் தனக்கு ஏற்பட்டுள்ள சரிவைத் தூக்கி நிறுத்தவும் தனக்கு ஏற்பட்டிருந்த கெட்டபெயரைச் சரிக்கட்டிக் கொள்வதற்காகவுமே நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார் என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கங்கை-காவிரி இணைப்புத்திட்டம் நிறைவேற குறைந்தது 300 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறியிருந்தார்.
அந்த "நம்பிக்கை"யிலேயே நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக ரூ.1 கோடி தருவதற்குத் தயார் என்று ரஜினிகூறியுள்ளார்.
சமீப காலமாக மக்கள் மத்தியில் அவருக்குத் தொடர்ந்து அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த கெட்டபெயரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தனக்கு ஏற்பட்டுள்ள சரிவைத் தூக்கிநிறுத்துவதற்காகவுமே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.
"மலைகளே ரஜினியிடம் மோதத் தயங்கும் போது மாம்பழம் என்ன செய்துவிட முடியும்?" என்ற வாசகத்துடன்கூடிய ஒரு அட்டை ரஜினியின் உண்ணாவிரத மேடை அருகே வைக்கப்பட்டிருந்தது.
இதெல்லாம் ரஜினிக்குத் தெரிந்து தான் வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் பாட்டாளி மக்கள்கட்சியை வம்புக்கிழுக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தான் மாம்பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications