காவிரி விவகாரம்: வேலூர் சிறையில் வைகோ உண்ணாவிரதம்
வேலூர்:
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கடந்த ஜூலை 11ம் தேதி வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து வைகோ சிறைக்குள்ளேயேஉண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அவர் இந்த உண்ணாவிரதத்தைமேற்கொண்டுள்ளார்.
வைகோவுடன் சுமார் 3,000 கைதிகளும் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலைவழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான, உடல் நிலை பாதிக்கப்பட்ட கைதிகள்மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசைத் தவிர அனைத்து அரசுகளுமே தமிழகத்திற்குதுரோகம் செய்து வந்துள்ளன.
தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை உச்ச நீதிமன்றம் நன்றாகப் புரிந்து கொண்டு தான் அப்போதிலிருந்துஇப்போது வரை தீர்ப்பு வழங்கி வருகிறது. அதன் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிடாமல் வேறு யார் உத்தரவிடுவார்கள்?
காவிரி விவகாரத்தில் சில கட்சித் தலைவர்கள் திரையுலக நட்சத்திரங்களைத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் கட்சியைக் கலைத்து விட்டுப் பேசாமல் இருக்கலாம்.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்ட அனைத்து மதிமுகவினர் மீதும்குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போதே நாங்கள் "பொடா" சட்டத்தை நசுக்கி எறிவோம் என்றார்கணேசன்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications