காவிரி விவகாரம்: ஜெ. மீது டி.ஆர். பாலு கடும் கோபம்
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னிடம் பேசட்டும். நான் ராஜினாமா செய்யவேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி அப்போது நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்று மத்தியசுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு ஒருதலைப் பட்சமாக செயல்படுவதால் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ஜெயலலிதாகூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் பாலு கூறுகையில்,
காவிரி விவகாரம் குறித்து நாங்கள் பிரதமர் வாஜ்பாயிடம் ஒன்றுமே பேசவில்லை என்பது போல் ஜெயலலிதாபேசி வருகிறார்.
பிரதமரிடம் பேசும் அனைத்தையும் நாங்கள் நிருபர்களைக் கூட்டிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே நான் தான் சுற்றுச்சூழல் அமைச்சர்.
எங்களை ராஜினாமா செய்யச் சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவரை என்னிடம்நேரடியாகப் பேசச் சொல்லுங்கள். நான் அவருக்குத் தகுந்த பதிலைச் சொல்கிறேன்.
நானும் காவிரி டெல்டாவைச் சேர்ந்த ஒரு விவசாயி தான். அங்குள்ள விவசாயிகளின் துயரம் குறித்துஜெயலலிதாவை விட எனக்கு நன்றாகவே தெரியும்.
காவிரி விவகாரம் குறித்து கர்நாடகத்திடம் முன்பே பேசி ஜெயலலிதா தீர்வு கண்டிருக்க வேண்டும். பிரச்சனைநன்றாக முற்றிப் போன பின் எங்களை ராஜினாமா செய்யச் சொல்வதில் என்ன நியாயம்?
இவ்விஷயத்தில் ஜெயலலிதாவின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக இனி கர்நாடகத்துடன் பேச்சுநடத்தவும் முடியாத சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது.
தென்னக நதிகளை ஒன்றாக இணைப்பது தான் காவிரிப் பிரச்சனை தீர்வதற்கு ஒரே வழி.
இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட்டே ஆகவேண்டும் என்றார் பாலு.
இதற்கிடையே பல்வேறு சுற்றுச்சூழல் நலத் திட்டங்களை தமிழக அரசு நத்தை வேகத்தில் மெதுவாகச் செய்துவருவதாகவும் பாலு குற்றம் சாட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications