எடைக்கு எடை விலை போகும் 10, 20 காசுகள்
விருதுநகர்:
அருப்புக்கோட்டை பகுதிகளில் ஏராளமான அளவுக்கு தேங்கி விட்ட 10 மற்றும் 20 காசுகளை எடைக்கு எடைபோட்டு வியாபாரிகள் பணம் பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் பத்து மற்றும் 20 காசுகளின் புழக்கம் திடீர் என்று நின்று விட்டது. அரசுத் தரப்பில் இந்த காசுகளைதடை செய்யவில்லை என்றாலும் கூட யாரும் இப்போது 10 மற்றும் 20 காசுகளை வாங்க மாட்டேன் என்கிறார்கள்.
முன்பெல்லாம் பஸ்களில் ரூ.1.75, ரூ.2.75 டிக்கெட்டுகள் வாங்கும் பயணிகளுக்குக் கூட கண்டக்டர்கள் 20பைசாவை மட்டும் மிச்சம் கொடுத்து வந்தனர்.
ஆனால் தற்போது குறைந்தபட்ச கட்டணமே ரூ.2 ஆகவும், ரூ.2.50, ரூ.3.00 என்ற ரீதியிலும் தான் கட்டணங்கள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதனால் 20 பைசாவின் புழக்கம் மேலும் குறைந்து விட்டது. அதை யாரும் மதிப்பது கூட இல்லை.
இதனால் வியாபாரிகளிடம் ஏராளமான அளவுக்கு இந்த 10 மற்றும் 20 காசுகள் தேங்கி விட்டன.
இவற்றை வாங்க பொதுமக்கள் மறுப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அருப்புக்கோட்டை பகுதிவியாபாரிகள் இவற்றை மூட்டை மூட்டையாக கட்டி எடைக்கு எடை போட்டு பணம் பெற்றுச் செல்கிறார்கள்.எப்படி?
இந்த நாணயங்கள் அனைத்தும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு கிலோ கணக்கில்விற்று விடுகின்றனர். ஒரு கிலோ காசுகளுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரைகிடைக்கிறதாம்.
இதையடுத்து காசுகளை எடைக்கு எடை வாங்குவதற்காகவே பலர் புதுக் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர்.வியாபாரமும் படு அமோகமாக நடக்கிறதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications