இலங்கையில் பாலசிங்கம்: அரசு ஹெலிகாப்டரில் வன்னி சென்றார்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் லண்டனிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ்விமானத்தில் கொழும்பு வந்தார். பின்னர் அங்கிருந்து அரசு ஹெலிகாப்டரில் வன்னிப் பகுதிக்குச் சென்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் கொழும்பு அருகே கட்டுநாயகாவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்தை புலிகள் பயங்கரமாகத் தாக்கி பல விமானங்களை நாசம் செய்தனர். இந்தத் தாக்குதலால் இலங்கைஅரசுக்கு ரூ.3,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தம் ஏற்பட்டு, தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கொழும்பு விமான நிலையத்திலேயே பாலசிங்கமும் அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும்வந்து இறங்கினர்.
அது மட்டுமின்றி இலங்கை அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில், இலங்கை விமானப்படையின் ஓய்வு பெற்றவிங் கமாண்டரான ராஜா விக்கிரமசிங்கேயுடன் கொழும்பிலிருந்து கிளம்பி வன்னிப் பகுதியில் உள்ளபுதுக்குடியிருப்புக்குச் சென்றார் பாலசிங்கம்.
அரசு ஹெலிகாப்டரிலேயே பாலசிங்கம் சென்றிருப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேலும் வலுவாக்கும்என்பதில் சந்தேகமே இல்லை.
பேச்சுவார்த்தை துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரும் பாலசிங்கம் லண்டனிலிருந்து வன்னிக்கு வந்தார்.ஆனால் அப்போது அவர் மாலத்தீவு வந்து பின்னர் அங்கிருந்து ஒரு கடல் விமானம் மூலம் வன்னிக்கு அருகேஉள்ள இரணமடு ஏரியை அடைந்து, அதன் பின்னர் ஒரு படகு மூலம் தான் வன்னி வந்து சேர்ந்தார்.
ஆனால் இம்முறை அரசின் ஹெலிகாப்டரிலேயே, அதுவும் கொழும்பு விமான நிலையத்தின் வழியாகவே அவர்வன்னிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்புக்கு வந்த பாலசிங்கத்தை கடற்புலிகளின் தலைவர் சூசையும், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வனும் வரவேற்றனர்.
புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரை பாலசிங்கம் சந்தித்துபேச்சுவார்த்தை நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளார்.
இம்மாத இறுதியில் துவங்கும் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை குறித்து தான் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.மேலும் சமீபத்தில் அம்பாரை மாவட்டத்தில் சிறப்பு பாதுகாப்புப் படையினரால் ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டதுகுறித்தும் அதன் பிறகு அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications