கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்குமா?- நாளை தீர்ப்பு
பெங்களூர்:
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியின் ஜாமீன்மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் "சப்ளை" செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் கொளத்தூர் மணி. அவர் மீது வேறு பல வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் கொளத்தூர் மணியையும் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர்மகாதேவசாமியையும் தன்னிடம் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவைக் கடத்தியுள்ள வீரப்பன் கேசட் மூலம் கோரியிருந்தான்.
இந்நிலையில் கொளத்தூர் மணி ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 10ம் தேதி இம்மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி. சபாகித் இவ்விசாரணையை வரும் 17ம் தேதிக்குஒத்திவைத்தார்.
அதன்படி நாளை இந்த ஜாமீன் மீது நாளை மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. நாளையே இம்மனு மீதானதீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்ப கர்நாடக அரசும் விரும்புகிறது என்பதால், அவருக்கு ஜாமீன்வழங்குவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று தெரிகிறது.
இதனால் கொளத்தூர் மணிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications