தமிழகம்-கர்நாடகம் இடையே ரயில், பஸ் போக்குவரத்து சீரானது
பெங்களூர்:
காவிரி விவகாரம் காரணமாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்மற்றும் பஸ் போக்குவரத்துக்கள் தற்போது முழுவதுமாகச் சீரடைந்துள்ளன.
தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு நீர் கூடத் தரக் கூடாது என்று கர்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில்அம்மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ரயில் மறியல் போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். டெல்லிக்குச்சென்று கொண்டிருந்த ஒரு ரயில் என்ஜினையும் தீவைத்து அவர்கள் கொளுத்தினார்கள்.
மேலும் பெங்களூர்-மைசூர் இடையே பல இடங்களில் ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்தியுமிருந்தனர்.
இதையடுத்து தமிழகத்திலிருந்து மைசூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் பெங்களூருடன் நிறுத்தப்பட்டன.சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டன.
இதனால் தமிழகத்திலிருந்து மைசூர் செல்ல வேண்டிய ஏராளமான தமிழர்கள் அவஸ்தைக்குள்ளாயினர். கடந்த 15நாட்களாக இதே அவஸ்தை தான்.
இந்நிலையில் நேற்று முதல் பெங்களூர்-மைசூர் இடையிலான ரயில் போக்குவரத்து சீரடைந்தது. தமிழகத்திலிருந்துமைசூர் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் எந்தவிதமான தடையும் இல்லாமல் சென்று சேர்ந்தன.
அதேபோல் கடந்த 13ம் தேதியிலிருந்து தான் பஸ் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு வந்தது.
கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்திலிருந்து யோசித்து யோசித்து தான் பஸ்கள் பெங்களூருக்கும் மற்ற கர்நாடகப்பகுதிகளுக்கும் சென்று கொண்டிருந்தன. தனியார் பஸ்கள் கூட அவ்வளவாக இயக்கப்படவில்லை.
மேலும் கடந்த 12ம் தேதி நெய்வேலியில் தமிழ்த் திரையுலகினர் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அன்றுமுழுவதுமே தமிழகத்திலிருந்து எந்த பஸ்சும் கர்நாடகத்திற்கு இயக்கப்படவில்லை.
பின்னர் 13ம் தேதி தமிழகம்-கர்நாடகம் இடையே ஓரளவு பஸ்கள் ஓடின. இதையடுத்து 14ம் தேதி முதல் பஸ்போக்குவரத்து மேலும் சீரடைந்தது. தற்போது அனைத்து இரு மாநிலங்களுக்கும் இடையே எந்தவிதமான தடையும்இல்லாமல் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
இதற்கிடையே ஈரோடு-மைசூர் இடையிலான பஸ் போக்குவரத்தும் இன்று காலை முதல் வழக்கம் போல்நடைபெறுகிறது. ஆனாலும் தனியார் வாகனங்களும் பஸ்களும் மட்டுமே ஓட ஆரம்பித்துள்ளன. இந்தப்பாதையில் அரசு பஸ்கள் வரும் 18ம் தேதி முதல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications