சென்னை நடுவண் தொடரூர்தி நிலையம்!!!
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு "சென்னை நடுவண் தொடரூர்தி நிலையம்" என்று தூய தமிழில் பெயர்சூட்டியுள்ளார் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி.
மத்திய அமைச்சரானது முதல் ரயில்வேயை கலக்கி வருகிறார் மூர்த்தி. இவருக்கு எழுத்துக் கூட்டித் தான் தமிழேபடிக்கத் தெரியும், ஆங்கில அறிவு சுத்தமாகக் கிடையாது. இதனால் இவரைப் போய் அமைச்சராக்கி தமிழகத்தின்பெயரை டெல்லியில் நாறடித்துவிட்டாரே ராமதாஸ் என்று தான் முதலில் தோன்றியது.
ஆனால், பல மெத்தப் படித்த அமைச்சர்கள் மத்தியில் உண்மையிலேயே தமிழகத்துக்காக பல திட்டங்களைக்கொண்டு வருவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் மூர்த்தி. இது தொடர்பாக பிரதமர் மற்றும் தனது கேபினட்அமைச்சர் நிதீஷ்குமாரிடம் பலமுறை பேசியிருக்கிறார்.
தமிழகத்தின் 95 சதவீத திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக அவர்கள் உறுதியளித்துவிட்டதால் அதிரடியாகசெயல்பட்டு வருகிறார் மூர்த்தி. மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களில் திடீர் திடீரென சோதனை செய்கிறார்.புதிய புதிய ரயில்களைத் துவக்கி வைக்கிறார். அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
தவறு செய்பவர்களை பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கிறார். அனைத்துக் கட்சி எம்.பிக்களின் கூட்டத்தைக் கூட்டிவிவாதிக்கிறார்.
மூர்த்தியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ரயில்வே அதிகாரிகளும் மிகவும் தடுமாறி வருகிறார்கள். சிலநேரங்களில் ரயில்வே அதிகாரிகளை மக்கள் மத்தியில் வைத்து இவர் தாறுமாறாகத் திட்டுவதால் அவர்கள்வெறுப்படைந்துள்ளனர். கொஞ்சம் வாயை அடக்கிக் கொள்வது மூர்த்திக்கு நல்லது.
இந்நிலையில் ரயில் நிலையங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்அமைச்சர் மூர்த்தி.
முதல் கட்டமாக சென்னையில் உள்ள சென்டிரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனிமேல்இது சென்டிரல் என்று அழைக்கப்படாது. மாறாக, "சென்னை நடுவண் தொடரூர்தி நிலையம்" என்று அழைக்கப்படவேண்டும் என்று மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வரும் 21ம் தேதிக்குள் புதுப் பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
"தெற்கு ரயில்வே" என்ற பெயரும் மாற்றப்பட்டு "தென் மண்டல இருப்புப் பாதை" என்றுமாற்றியமைக்கப்படவுள்ளது.
இதேபோல தமிழகத்தில் உள்ள பிற ரயில் நிலையங்களின் பெயர்களையும் தமிழில் சூட்ட வேண்டும் என்று மூர்த்திஉத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மூர்த்தியின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள் இடையே ஆதரவையும் பிறரிடம் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications