முரசொலி மாறன் கவலைக்கிடம்
சென்னை:
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாகஅப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஜூலை மாதம் மாறனுக்கு டெல்லியில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருடையஇருதயத்தில் செயற்கை வால்வு பொருத்தப்பட்டது.
அந்த செயற்கை வால்வில் பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அவருடைய உடல்நிலை மிகவும்பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் அவருடைய இருதயத்தில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை வால்வை எடுத்துவிட்டு வேறுஒரு புதிய செயற்கை வால்வை ஆபரேஷன் செய்து டாக்டர்கள் பொருத்தினர். சென்னை அப்பல்லோமருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.
அதற்குள்ளாக மாறனின் ரத்த ஓட்டத்திலும் பூஞ்சை அதிக அளவில் கலந்து விட்டதால் அவருக்கு அதிகமானகாய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய நுரையீரல், சிறுநீரகம் ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து "மார்ஸ்" எனப்படும் சிறுநீரகச் சுத்திகரிப்பு கருவியைப் பயன்படுத்தி மாறனின் சிறுநீரகம்சுத்தப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து மருத்துவஆலோசனைகள் பெறப்பட்டு மாறனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளாக அப்பல்லோமருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாறனுக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மருத்துவமனையின்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறனின் உடல் நிலை குறித்து பிரதமர் வாஜ்பாய் டெலிபோன் மூலம் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர்டாக்டர் பி.சி. ரெட்டியிடம் விசாரித்தார். மத்திய நலத்துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹாவும் மாறனின் உடல் நிலைகுறித்து விசாரித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications