7,500 அடி உயரத்தில் இயங்கும் நீராவி என்ஜின்: திருச்சி தொழிற்சாலை சாதனை
திருச்சி:
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையில் செல்லும் சக்தி மிக்க நவீன நீராவிஎன்ஜின்களை திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
இதில் நிலக்கரிக்குப் பதிலாக ஹை-ஸ்பீட் டீசல் பயன்படுத்தப்பட உள்ளது.
நீராவி என்ஜின்கள் படிப்படியாக இந்திய ரயில்வேயால் அகற்றப்பட்டு வந்தாலும் டார்ஜிலிங் போன்ற சுற்றுலா பகுதிகளில்பயணிகளைக் கவரும் வகையில் நீராவி என்ஜின்களையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டார்ஜிலிங்-ஹிமாச்சல் ரயில்வேயின் சார்பில் இயக்கப்படும் ரயில்கள் தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் இயக்கப்படும்ரயில்களாகும். வெறும் இரண்டடி அகலம் கொண்ட ரயில் பாதையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நீராவி என்ஜின்களில் பயணிப்பதை வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் விரும்புவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலை பாதிக்காத நவீன என்ஜின்கள் தயாரிக்கும் பொறுப்பு திருச்சி ரயில் தொழிற்சாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த டிராக்குகளில் நிலக்கரிக்குப் பதிலாக ஹை-ஸ்பீட் டீசல் எண்ணெயால் இயங்கும் நீராவி என்ஜினை திருச்சிபொன்மலை ரயில்வே தொழிற்சாலை வடிவமைத்துள்ளது. இந்த என்ஜினின் அகலமும் மிகக் குறுகியது. இரண்டடி அகலபாதையில் செல்லும் வகையிலானது.
இது போன்ற 3 என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் திருச்சி ரயில்வே தொழிற்சாலையின் துணை தலைமைப் பொறியாளர்நாகராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு என்ஜினும் ரூ. 1.5 கோடி மதிப்பிலானவை. ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நீராவியை இந்த என்ஜின்கள் உற்பத்திசெய்யும்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து கும் என்ற இடம் வரை அமைந்துள்ள ரயில் பாதை கடல் மட்டத்தில் இருந்து7,407 அடி உயரத்தில் உள்ளது. இந்த பயங்கரமான உயரத்தில், பனிப் பொழிவுகளையும் மீறி இந்த நீராவி ரயில் என்ஜின்இயங்கியாக வேண்டும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications