"தமிழகத்தில் ரசிகர் மன்றமே இருக்கக் கூடாது": ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் ஒரு நடிகருக்கும் ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய இளைஞர் சங்கத்தின் மாநாடுநடந்தது. அதில் பேசிய ராமதாஸ், நடிகர்களை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசுகையில்,
ரசிகர் மன்றங்கள் இன்று நேற்றல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களை சீரழித்து வருகின்றன.
எனவே இந்த மன்றங்களை உடனடியாக கலைக்க வேண்டும். இது நமக்குத் தேவையே இல்லை.
நல்லவற்றை ரசிப்போம். ஆனால் அதற்காக ரசிகர் மன்றங்களை வைத்து, நடிகனுக்கு பூஜை செய்து, சூடம் காட்டிநம்மை நாமே முட்டாள் என்று பறைசாற்றிக் கொள்ள வேண்டுமா?
ரசிகர் மன்றங்களால் வீணடிக்கப்பட்டு வரும் இளைஞர்களின் சக்தியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சினிமாவால் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்களைத் தான் நமது இளைஞர்கள்கற்றுக் கொண்டுள்ளனர்.
காவிரி நமது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம். நதி நீர்ப் பிரச்சினையை தீர்க்க நதிகளைதேசியமயமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக கூறி வருகிறது. இது ஒன்று தான் நிரந்தரத்தீர்வாகஇருக்க முடியும் என்றார் ராமதாஸ்.
பின்னர் வன்னிய இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து நடைமுறைகள் குறித்தும் அந்த மாநாட்டில்ராமதாஸ் அறிவித்தார். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications