தமிழ் டி.வி. சேனல் ஒளிபரப்ப பெங்களூர் போலீசார் தடை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கேபிள் டி.வியில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று கேபிள் ஆபரேட்டர்களை பெங்களூர் மாநகரபோலீஸ் கமிஷனரான சங்கிலியானா நேரடியாகவே மிரட்டும் தொணியில் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுஇரண்டு வாரங்களாகி விட்டது. மேலும் தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதும்தடைசெய்யப்பட்டு விட்டது.

காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூடத் தரக்கூடாது என்று பெங்களூரில் கன்னட நடிகர்கள் பெரும்பேரணி நடத்தினர். இதனால் தமிழ் திரையுலகமும் வீறுகொண்டு எழுந்தது.

நெய்வேலியில் தமிழ் திரையுலகம் போராட்டம் நடத்தும் என்று அறிவித்தவுடனேயே கர்நாடகாவிலிருந்துஅதற்குப் பெரும் எதிரப்பு அலைகள் எழும்பின. இதையடுத்து தான் தமிழ் டி.வி. சேனல்கள் மற்றும்தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

இதற்காக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களைத் தூண்டி விட்டவர்களே கர்நாடகபோலீசார் தான். ஆனால் இவை அனைத்தையும் மறைமுகமாகவே முதலில் செய்தனர்.

இந்நிலையில், கேபிள் டி.விக்களில் தமிழ் சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று தற்போது கர்நாடக போலீசார்நேரடியாகவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இடையிடையே ஒரு சில கேபிள் டி.பி. ஆபரேட்டர்கள் தமிழ் சேனல்களை ஒளிபரப்பி வந்தனர். ஆனால் கன்னடவெறியர்களின் மிரட்டல்களைத் தொடர்ந்து போலீசாரே இத்தகைய நடவடிக்கைகளில் நேரடியாகஇறங்கியுள்ளனர்.

காவிரியில் நீர் திறந்துவிட மறுத்த கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளஅவமதிப்பு வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதுவரை தமிழ் டி.வி. சேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்று சங்கிலியானா கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.அதுபோல் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களையும் திரையிடக் கூடாது என்று தியேட்டர் அதிபர்களுக்கும் உத்தரவுபறந்துள்ளது.

மீறி தமிழ் சேனல்களையோ, தமிழ் படங்களையோ ஒளிபரப்பினால் ஏற்படும் விளைவுகளுக்கு போலீசார்பொறுப்பல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

தாங்கள் விரும்பும் சேனலைப் பார்ப்பதற்காகத் தான் கேபிள் டி.வியில் மக்கள் இணைப்பு பெறுகின்றனர். இந்தஅடிப்படை உரிமையைக் கூட போலீசாரே நேரடியாகப் பறிப்பதைக் கண்டு பெங்களூர் தமிழர்கள் மிகவும்அதிருப்தி அடைந்துள்ளனர்.

மிரட்டல்களை விடுக்கும் கன்னட வெறியர்களை அடக்கும் கடமையை விட்டுவிட்டு, மறந்து விட்டு, அவர்களுக்குஆதரவாகவே போலீசார் செயல்பட ஆரம்பித்திருப்பதாலும் போலீசார் மீது மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பெங்களூர் தமிழ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் கர்நாடக அரசிடம் கேட்டுக் கொண்டும் கூடஎந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய போலீசாரும் தமிழக மக்களுக்குஎதிராகத் திரும்பியுள்ளதைக் கண்டித்து போராட்டத்தில் குதிக்கலாமா என்பது குறித்து தமிழ் அமைப்புகள்யோசித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+