அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டது.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டுமாதங்களாக ஸ்டிரைக் நடந்து வந்தது.
ஆனால் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத தமிழக அரசு சமீபத்தில் அரசுக் கல்லூரிகளைபல்கலைக்கழகங்களுடன் இணைப்பதற்கான அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இது ஆசிரியர்களிடையேமிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது.இக்கூட்டத்தில் ஸ்டிரைக்கைத் தொடர்வதால் பயனில்லை என்பதாலும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்என்பதாலும் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் பணிக்குத் திரும்புவது என ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதைத் தவிர பின்வரும்தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன:
- போராட்டத்தின் போது காயமடைந்த மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டுள்ள மாணவர் பிரதிநிதிகள், மாணவர் சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
- அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது அவசியம் தானா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டாலும் கூட தமிழ் மீடியம் வகுப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை நீக்கி விடக் கூடாது.
- காரைக்குடி அழகப்பா கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி முதல்வர்களை மிரட்டிய எம்.எல்.ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications