சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி
சென்னை:
தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியுடன் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தது. இதையடுத்துதமாகா தலைவராக இருந்த ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்த இளங்கோவன் செயல் தலைவராக மாற்றப்பட்டார். முன்னாள்தமாகாவைச் சேர்ந்த சோ. பாலகிருஷ்ணன் தமிழக காங்கிரஸின் தலைவரானார்.
இப்படி தமாகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வந்தது காங்கிரஸ்தலைவர்களுக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.
இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்தப் பதவியைஎப்படியாவது பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் (?) வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
தற்போது தலைவராக இருக்கும் யசோதா, தானே இப்பதவியில் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால் எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்தை தலைவராக நியமிக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
இளங்கோவனும் வாசன் கருத்தை ஆதரித்துள்ளார். காரணம், அவருக்கு யசோதாவை பிடிக்காது.
இந்த இரு பிரிவினரும் கடுமையாக மோதி வருவதால் வேறு யாரையாவது நியமிக்கலாமா என்றும் காங்கிரஸ்மேலிடம் யோசித்து வருகிறதாம்.
அனேகமாக பாரமலை என்ற எம்.எல்.ஏவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. முன்னாள் மத்தியஅமைச்சர் பிரபுவும் தன் பங்குக்கு சிலரது பெயர்களை பரிந்துரை செய்துள்ளார்களாம்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு நாளை சென்னையில் அகில இந்திய பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா தலைமையில் நடைபெறவுள்ளது. ஒருமனதாக தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications