பெண் தற்கொலை: கணவருக்கு 8 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
மனைவி தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவருக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
சென்னை குமரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி வேளாங்கண்ணி.
கடந்த 1996ல் இவர்களுக்கு கல்யாணம் நடந்தது. ஒரு ஆண்டில் வேளாங்கண்ணி கர்ப்பமடைந்தார். இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் 1997ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தனது வீட்டில் தூக்கில்தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷ், அவரது தந்தை மணி, தாயார் மாரிஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்த போதே மணி இறந்து விட்டார்.
விசாரணையின் போது ரமேஷ் குடிகாரர் என்றும், வரதட்சணை கேட்டு தினசரி தனது மனைவியை அடித்து,உதைத்து கொடுமைப்படுத்துவார் என்றும் தெரிய வந்தது.
மேலும், ஒருமுறை வேளாங்கண்ணியிடமிருந்த தாலியைப் பறித்துக் கொண்டு, அவருடைய சொந்த ஊரானசென்னைக்கு அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் கொண்டு போய் விட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில் மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதி விமலா தன்னுடைய தீர்ப்பில்,
ரமேஷ் தான் வேளாங்கண்ணியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றிநிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரது கொடுமைகள் தாங்க முடியாமல் தான் வேளாங்கண்ணி தற்கொலை முடிவுக்கு தூண்டப்பட்டுள்ளார்.எனவே ரமேஷுக்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன் என்று கூறியுள்ளார் நீதிபதி விமலா.












Click it and Unblock the Notifications