தமிழை புறக்கணித்து விட்டு குடமுழுக்கா?- மதுரை ஆதீனம் ஆவேசம்
மயலாடுதுறை:
திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும், தமிழையும் புறக்கணித்து விட்டு கோவில்களில் குடமுழுக்கோ,வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிகபரமாச்சார்ய சுவாமிகள் கூறினார்.
மயிலாடுதுறையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தமிழுக்குத் தான் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
அப்படியானால் கோவில்களிலும் தமிழ் தானே முதலிடம் வகிக்க வேண்டும்?
தமிழகத்தில் தமிழ் வழிபாடு வேண்டும் என்று விரும்புவோருக்கு தமிழில் அர்ச்சனைகள் செய்ய வேண்டியதுகோவில் பூசாரிகளின் கடமை. அதை அவர்கள் மீறக் கூடாது.
இதற்காக சமஸ்கிருதம் மீது வெறுப்போ, விரோதமோ, அதிருப்தியோ கிடையாது. சமஸ்கிருத மொழியில்அர்ச்சனை வேண்டாம் என்று கூறவில்லை.
ஆனால் தமிழ் மொழியிலும் அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தரையும், தேவாரத்தையும் புறக்கணிப்பதால் தான் தமிழும் புறக்கணிக்கப்படுகிறது.அவ்வாறு புறக்கணித்து விட்டு குடமுழுக்கோ, வழிபாடோ செய்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்மதுரை ஆதீனம்.
இதற்கிடையே தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மதமாற்றத் தடைச் சட்டத்தையும் மதுரை ஆதீனம்வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஏழை மக்களை சிலர் ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்கின்றனர். இதனால் மதமாற்றத் தடைச் சட்டத்தைக்கொண்டுவர வேண்டும் என்று கடந்த 1981ம் ஆண்டிலிருந்தே நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தற்போது இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. இந்தச் சட்டத்தால் யாருக்கும்பாதிப்பு கிடையாது. எனவே அனைத்துக் கட்சிகளும் சட்டசபை உறுப்பினர்களும் இந்தச் சட்டத்தை ஒருமனதாகஏற்க வேண்டும்.
மற்ற மத அமைப்புகளும் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை எதிர்த்துகல்வி நிறுவனங்களை மூடிவிடுவோம் என்று சில அமைப்புகள் கூறியிருப்பது ஜனநாயக விரோதமானது.
இது தொடர்பான போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதும் மிகவும் தவறாகும் என்றார் மதுரை ஆதீனம்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் வாழப்பாடி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பாயுடன் மணமக்கள் போட்டா போட்டி.. 5 நிமிடத்தில் 90 திருமணம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications