போனஸ் விவகாரம்: அதிமுக தொழிற்சங்கம் மீது கருணாநிதி பாய்ச்சல்
சென்னை:
திமுக அரசு 20 சதவீத போனஸ் கொடுத்த போது அதை எதிர்த்து அதற்கே பொங்கி எழுந்த அதிமுகதொழிற்சங்கத்தினர் இப்போது 8.33 சதவீத போனஸ் என்ற அறிவுப்புக்குப் பின்னரும் ஏன் வாயே திறக்காமல்உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சியில் நடந்த நிகழ்வுகளை, இப்போதைய ஆட்சியின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் காட்டி திமுக அரசைமட்டம் தட்டுவது அதிமுகவினரின் வாடிக்கையாகும்.
ஆனால் இப்போது ஒரு நிகழ்வை அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அதை இப்போது நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திமுக ஆட்சிக்காலத்தில் 20 சதவீத போனஸ் தொகை வழங்கப்பட்டது. ஆனால் 25 சதவீதம் வேண்டும் என்றும்குறைத்துக் கொடுத்தால் வாங்க மாட்டோம் என்று அதிமுக தொழிற்சங்கத்தினர் பொங்கி எழுந்தனர். இப்போதுஎங்கே போயிற்று அவர்களது வீரம்?
வெறும் 8.33 சதவீத போனஸ் தருவதாக தற்போதைய அரசு அறிவித்தும், அதிமுக தொழிற்சங்கம் வாய் மூடிமவுனமாக இருப்பது ஏன்? இதையும் ஒப்பிட்டுக் கருத்துக் கூற வேண்டியதுதானே என்று காட்டமாக கேட்டுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications