தமிழக அவமதிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்தார் கிருஷ்ணா
டெல்லி:
தமிழகம் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் இன்று பதில் மனுதாக்கல் செய்தார்.
கடந்த மாதம் 3ம் தேதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காததைத் தொடர்ந்து அம்மாதஇறுதியில் கர்நாடக அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்றுகர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் கர்நாடகம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு இரண்டாவது முறையாக அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இவ்வழக்கு தொடர்பாக 23ம் தேதிக்குள் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியது.
கிருஷ்ணா தவிர, கர்நாட நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும்உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி இவ்வழக்கு தொடர்பாக இன்று கிருஷ்ணா தன்னுடைய பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில்,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நானோ என் தலைமையில் உள்ள கர்நாடக அரசோ எந்தவிதத்திலும் மீறவே இல்லை.
நாங்கள் கூறுவதை எப்படியும் எதிர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாஇவ்வாறு அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களின் மக்களிடையே நிலவும் ஒற்றுமையைக்குலைக்கவும் ஜெயலலிதா முயன்று வருகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் எப்போதுமே மதிக்கிறோம். இப்போதும் மதித்திருக்கிறோம்.
விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்யவுள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைத்து விடும்.
அப்போது இந்த காவிரிப் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்பதால், அவமதிப்பு வழக்கு விசாரணைகளை மேலும்இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இவ்வழக்கு மீதான விசாரணை மட்டுமல்லாமல் தமிழக அரசு கடந்த மாதம் தொடர்ந்த முதல் அவமதிப்பு வழக்கும்நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக கிருஷ்ணாசமீபத்தில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
கிருஷ்ணாவுடன் பேசுவதே "வேஸ்ட்". இப்படி ஒரு பேச்சுவார்த்தை யோசனைக்கு அர்த்தமே இல்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்க மறுக்கும் கிருஷ்ணாவுடன் பேசுவதால் எந்த ஒரு உருப்படியான தீர்வும்கிடைக்காது.
மேலும் காவிரி அவமதிப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பேச்சுவார்த்தை நடத்துவதேதவறு என்றார் ஜெயலலிதா.
இதற்கிடையே தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரில் 77 சதவீதத்தை ஏற்கனவே திறந்துவிட்டுள்ளதாககர்நாடக அரசு "புதிய கதை" கூறியுள்ளது. விரைவில் எஞ்சிய நீரையும் திறந்து விடுவோம் என்று கூறுகிறது. இதுஎந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications