ராமதாசுக்கு திரைப்பட கூட்டமைப்பினர் எச்சரிக்கை
சென்னை:
வட மாவட்டங்களில் திரைப்படங்கள் வெளியிடுவதற்கு பாமக இடையூறு செய்தால் அதை எதிர்த்துக் கடுமையானபோராட்டம் நடத்துவோம் என்று அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தமிழ்நாடு திரைப்படக்கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று கூறி சமீபத்தில் வெளியான "பாபா" படத்தை பாமகவினர்வட மாவட்டங்களில் திரையிட விடவில்லை. இதனால் பல ஊர்களில் அந்தப் படம் திரையிடப்படவில்லை.
ராமதாஸின் போராட்டம் மக்கள் மனதில் எதிரொலித்ததால், திரையிட்ட மற்ற இடங்களிலும் பெண்கள் படம்பார்க்க வரவில்லை. படமும் சரியாக ஓடவில்லை.
இந்த நிலையில் வட மாவட்டங்களில் "பாபா"வுக்கு ஏற்பட்ட கதி பிற ஹீரோக்களின் படங்களுக்கும் ஏற்படலாம்என்று அஞ்சிய தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்உரிமையாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராகிம் ராவுத்தர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்துவிவாதிக்கப்பட்டது. பின்னர் இப்ராகிம் ராவுத்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் படங்களைத் திரையிட முடியாத நிலைநிலவுகிறது. இங்கு அரசியல்வாதிகளின் குறுக்கீடு அதிகமாக உள்ளது.
எனவே முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் தலையிட்டு தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து,படங்களை ஓடச் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அரசியல் குறுக்கீடுகள் தொடர்ந்தால், மிகப் பெரும் போராட்டத்தில் இறங்குவோம். திரையுலகமேஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நேரிடும்.
"பாபா" படத்திற்கு இன்று இந்த நலை. நாளை மற்ற படங்களுக்கும் இதுபோல ஏற்பட்டு விடக் கூடாதுஎன்பதற்காகத்தான் இந்த அவசரக் கூட்டம், தீர்மானங்களும்.
டாக்டர் ராமதாஸ் டிகர்களையும், ரசிகர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு காந்திய வழியில் எதிர்ப்பைத்தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் இப்ராகிம் ராவுத்தர் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications