பணிக்கு திரும்புங்கள்: ஜெ. அழைப்பு
சென்னை:
காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதைக் கைவிட்டுவிட்டுஉடனடியாக பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இந்த வேலைநிறுத்தம் தோல்வியடையப் போவது நிச்சயம்.
பெரும்பாலான ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் இன்று வழக்கம் போலஅலுவலகங்களுக்கு வந்துள்ளனர்.
மற்ற ஊழியர்களும் தங்கள் பணிக்கு விரைவில் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது "எஸ்மா"எனப்படும் அத்தியாவசியப் பணிப் பராமரிப்புச் சட்டம் பாயும்.
மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தொகையும் "கட்" செய்யப்படும்.
இனிமேல் அரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்றார் ஜெயலலிதா.
இதற்கிடையே இன்று தொடங்கிய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கைஎதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இருந்தாலும் ஜெயலலிதா கூறியதற்கு மாறாக, சென்னையில் முக்கால்வாசி அரசு அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றிவெறிச்சோடிக் காணப்பட்டன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால், மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.
சேப்பாக்கம் அரசு அலுவலகங்கள், மருத்துவ இயக்குநர் வளாக அரசு அலுவலகங்கள், எழிலகம் ஆகிய இடங்களில் உள்ள அரசுஅலுவலகங்களின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்து கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
போக்குவரத்தில் பாதிப்பில்லை:
இந்நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களும் இன்று ஒருநாள் மட்டும் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாகக்கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் வேலைநறுத்தம் பிசுபிசுத்தது.
சென்னையில் பெரும்பாலான பஸ்கள் தங்கு தடையில்லாமல் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. இதே நிலை தான் பிறமாவட்டங்களிலும் காணப்படுகிறது.
சென்னையில் பல இடங்களில் பணிக்கு வந்திருந்த டிரைவர்கள், கண்டக்டர்களை வேலைநறுத்தம் மேற்கொண்டுள்ளபணியாளர்கள் பணிக்குப் போக விடாமல் தடுத்ததால், அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர்.
மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி பகுதியில் இந்த தடியடி நடந்தது. திருவான்மியூர் டெப்போவைச் சேர்ந்த சில டிரைவர்கள்,கண்டக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கம் போல நெருக்கடியைப் பயன்படுத்தி ஆட்டோக்காரர்களும், வேன்காரர்களும் மக்களை ஏமாற்றி காசுபார்த்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications