தமிழ் பட தியேட்டருக்கு தீ வைப்பு, பிலிம் ரோல் எரிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ் படம் திரையிட்ட ஒரு தியேட்டரின் ஸ்கிரீனை கன்னட வெறியர்கள் சிலர் எரித்தனர். அந்தப்படத்தின் திரைச் சுருளையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
ஆர்.டி. நகர் பகுதியில் "ஜெயலட்சுமி" என்ற டூரிங் டாக்கீஸ் உள்ளது. கன்னட வெறியர்களின் மிரட்டலையும் மீறிஇந்தத் தியேட்டரில் ரஜினியின் மனிதன் தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதைக் கேள்விப்பட்ட 20 கன்னட வெறியர்கள் கொண்ட ஒரு கும்பல் இந்தத் தியேட்டருக்குள் புகுந்தனர்.
நுழைந்த வேகத்தில் அங்கிருந்த திரைச் சீலைக்கு அவர்கள் தீ வைத்தனர். இதனால் அது எரிந்து சாம்பலானது.அப்போது அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இதைக் கண்டதும் அலறி அடித்துக் கொண்டு வெளியேஓடினர்.
பின்னர் நேரடியாக ஆபரேட்டர் அறைக்குள் சென்ற அந்தக் கும்பல் அங்கிருந்த ஒரு திரைப்படச் சுருளையும்பறித்துக் கொண்டு அதையும் தீயிட்டுக் கொளுத்தியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தியேட்டரின் அதிபரையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் தியேட்டரில் நிறுத்தப்பட்டிருந்த ஒருஸ்கூட்டரையும் அந்தக் கும்பல் எரித்தது.
இதற்குள் போலீசாருக்குத் தகவல் போய், அவர்களும் தியேட்டருக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்தக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
சில நாட்களுக்கு முன்னால் ரஜினி நடித்த "மனிதன்" என்ற தமிழ்ப் படம் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால்இன்று தெலுங்குப் படம் தான் திரையிட்டிருந்தோம். அந்தக் கும்பலிடம் எவ்வளவோ கூறியும் அவர்கள் அதைக்கேட்காமல் தீவைத்து விட்டனர் என்று "ஜெயலட்சுமி" தியேட்டரின் அதிபர் கூறினார்.
தமிழர்கள் போராட்டம்:
இதற்கிடையே கர்நாடகத்தில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து பெங்களூர் தமிழ்ச் சங்கத்தலைவர் க.சுப்பிரமணியம் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்பினர் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்பக் கோரியும், தமிழ் படங்களைத் திரையிடக் கோரியும்தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டுபோராட்டம் நடத்தினர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழர்களும் ஏராளமானஅளவில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் பிரச்சனை தீராவிட்டால், ஒரு லட்சம் தமிழர்களைத் திரட்டிக் கொண்டு பெரும்போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் அறிவித்தன.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications