மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல்: கபினி அணை முற்றுகை
மண்டியா:
தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத்தொடர்ந்து மண்டியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மீண்டும் துவக்கிவிட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியின் இயல்புவாழ்க்கையையே ஸ்தம்பிக்கச் செய்திருந்தனர். கடந்த வாரம் தான் அங்கு நிலைமை சீரானது.
இந்நிலையில் மண்டியா மாவட்டத்தின் இன்டவலு மற்றும் யாழியூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள்மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கேட்டு முதல்வர் கிருஷ்ணா பின் வாங்கி விடக் கூடாது என்று கூறிய விவசாயிகள்தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக் கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் பெங்களூர்-மைசூர் இடையேயான சாலைப் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விவசாயிகளை அமைதிப்படுத்தினர். அதன் பின்னர் அவர்கள்சாலை மறியலைக் கைவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.
இதற்கிடையே கபினி அணையின் முன் பகுதியிலும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஆனாலும் அவர்களால்அணையின் உள் பகுதிக்குச் செல்ல முடியவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த உடனேயே கபினி அணையில் ஏராளமான அதிரடிப் போலீசார் குவிக்கப்பட்டுவிட்டனர்.
இதனால் கபினி அணையின் முன் பகுதியை மட்டும் விவசாயிகள் முற்றுகையிட்டு தமிழகத்திற்கு எதிராகக்கோஷங்களை எழுப்பினார்கள்.
அவர்கள் இன்னும் தொடர்ந்து அங்கேயே இருந்த கொண்டு, அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர்திறந்துவிடப்படுகிறதா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சொட்டு நீர் திறந்துவிடப் பட்டாலும் கூட அந்த விவசாயிகள் போராட்டத்தில் மேலும் தீவிரமாகக் குதிப்பார்கள்என்று தெரிகிறது.
கபினி அணை தவிர கே.ஆர். சாகர் உள்ளிட்ட மற்ற அணைப் பகுதிகளிலும் போலீசார் தீவிரப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications