சப்-இன்ஸ்பெக்டரை கொன்று விட்டு கான்ஸ்டபிளும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

திருவாரூரில் சப் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற கான்ஸ்டபிள் அதே துப்பாக்கியால்தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் சிறப்புக் காவல் படையின் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன். அவரது பிரிவின் கீழ் கான்ஸ்டபிளாகஇருந்தவர் சொக்கலிங்கம். இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் விடுமுறை கேட்டுள்ளார் சொக்கலிங்கம். ஆனால் தர மறுத்துள்ளார் பாஸ்கரன்.

வியாழக்கிழமை இரவுப் பணியில் இருந்த சொக்கலிங்கம் வெள்ளிக்கிழமை காலை பணி முடிந்தும் முகாமிலேயேஇருந்துள்ளார். காலையில் பணிக்கு வந்த பாஸ்கரனை, தன்னிடமிருந்த அலுவலக துப்பாக்கியால் சரமாரியாகசுட்டுத் தள்ளினார்.

மொத்தம் 20 ரவுண்டுகள் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பாஸ்கரன் அங்கேயே இறந்தார்.

பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டார் சொக்கலிங்கம். இதில் பலத்த காயமடைந்த அவரைபோலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+